
போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கொள்ளுப்பிட்டியில் கைது
மது அருந்திவிட்டு போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
