
மட்டக்களப்பு இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர் தனியார் பேருந்து சாரதி ஒருவரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான சாரதி நேற்று திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பிலிருந்து அம்பிலாந்துறைக்கு பேருந்தை ஓட்டிச்சென்ற போது தனியார் பேருந்து சாரதியால் தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த சாந்தலிங்கம் (55 வயது) என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல்
