இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 321.69 முதல் ரூ. 321.94 ஆகவும், விற்பனை விலை ரூ. 331.50 முதல் ரூ. 331.60 ஆகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், வளைகுடா நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த அதே வேளையில், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.