
தாயை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த மகள்
இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் தமது தாயை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி 71 வயதான வயோதிப பெண் தமது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
தாம் பணிக்கு சென்று மீள திரும்பிய நிலையில் தமது தாயின் சடலத்தை அவதானித்ததாக அவரது மகள் முன்னதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அவரே அவரது தாயை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் 38 வயதான மகள் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
