
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை : உயிரியல் தகவல்கள் உள்ளடக்கம்
டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிரியல் தகவல்கள் அடங்கும்.
அத்துடன் பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.
இத்திட்டத்திற்காக மொத்தமாக கணிப்பிடப்பட்டுள்ள தொகையில் 15% அதாவது 450 மில்லியன் ரூபா இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதுடன் இந்திய இலங்கை கூட்டு ஒப்பந்தத்துக்கமைய குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
