
கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் இன்றிரவு பலத்த மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
