இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை

 

ஆடைத்தொழிற்சாலையொன்றில் சாரதியாக பணியாற்றும் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஹங் வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கிரிய பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே  (வயது 35) இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போது மெகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.