முட்டையின் விலையை குறைப்பதற்கு தயாரில்லை

முட்டையின் விலையை குறைப்பதற்கு தயாரில்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தற்போது முட்டையொன்று 55  ரூபாயிற்கு  விற்பனை  செய்யப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை குறித்த விலை தொடரும் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.