
நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ விபத்து
-பதுளை நிருபர்-
நுவரெலியா பிரதான நகரில் லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது.
உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
எனினும் உணவகத்தில் சமையல் அறையில் காணப்பட்ட பொருட்கள் பல தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
