
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அமைதியின்மை
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.
எனினும் குறித்த பகுதியை பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொலிஸார் இன்று அனுமதி வழங்கியிருக்கவில்லை.
இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும்பாலான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், கஜேந்திர குமார் உள்ளிட்ட தரப்பினருக்கு மேய்ச்சல் தரை பகுதியை பார்வையிடுவதற்கு அனுமதியை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அந்த பகுதிக்கு பிரவேசித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் உள்ளிட்ட தரப்பினருக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
