வடிவேல் சுரேஷ்க்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான்

-பதுளை நிருபர்-

 

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்க்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் கொழும்பில் உள்ள தொழிலாளர் இல்லத்துக்கு விஜயம் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்