லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.