
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில இடங்களில் எதிர்வரும் நாட்களில் கடும் மழை
நாளை வியாழக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

