
வாளியில் தண்ணீர் நிறைந்து இருக்கும் போது அதன்மேல் ஏறி எவ்வாறு தூக்கிட முடியும்?
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அரபுக் கல்லூியிலிருந்து மரணித்த மாணவனின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன் நீதிக்காக தம்மால் முன்னெடுக்கப்படும் அரசியல் பங்களிப்புக்கள் குறித்து தெரிவித்தனர்.
இதன்போது உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கையில்,
எங்கள் பிள்ளை இனி வர போவதில்லை – ஆனால் எங்களுக்காக கிடைக்கும் நீதியானது மத்ரசாக்களில் இனி எந்த உயிரும் அநியாயமாக போக கூடாத அளவு அமைவதுடன் ஏனைய சமூகத்தவர்கள் அரபுக் கல்லூரிகளை விமர்சித்து கையால முயற்சிக்கும் வகையில் நடவடிக்கை அமைய வேண்டும்
தூக்கிட்டதாக கூறும் மலசல கூடத்தில் நாம் செல்லும் வரை தண்ணீர் வாளி நிறைந்து காணப்பட்டது. வாளியில் நீர் இருக்கும் போது அவர் இவ்வாறு அதற்கு மேல் ஏறி அவ்வளவு உயரத்தில் துணியை போட்டு கழுத்தில் இறுக்கி போட முடியும் அத்தோடு அந்த மலசல கூட யன்னல் பகுதிக்குள் ஒரு பக்கத்தால் கையை விட்டு துணியை போட்டு மறுபக்கத்தில் எடுக்கும் அளவு சாத்தியம் இல்லை ..ஆக அவர் தூக்கிட்டு மரணித்த அந்த மலசல கூடத்தில் எந்த தடயமும் இல்லை –
சம்பவம் நடந்த அன்று இரவு ஒரு பிரச்சனை மத்ரஸா வாருங்கள் என 9மணிக்கு பிறகே எனக்கு தொலைபேசி மூலம் மௌலவி அறிவித்தார், அங்கு செல்லும் வரை அவர் எமது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை, எங்களது மகன் விரும்பியே அங்கு சேர்ந்தார் அவரை வற்புறுத்தி சேர்த்து இருந்தால் அல்லது குழப்படி உள்ளவராக இருப்பாராக இருந்தால் பரவாயில்லை..
அத்துடன் அங்கு சென்ற எம்மை கண்டதும் உங்கள் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதற்கு நான் என்ன செய்வது என பொறுப்பில்லாமல் கூறினார் மக்கள் அங்கு திரண்டு நின்றனர், பின்னர் நாங்கள் வைத்தியசாலை சென்று விட்டோம் இ எங்களுக்கு தகவல் வழங்க பல மணி நேரங்களுக்கு முன்பே அவரது சகோதரரை ஓட்டமாவடியில் இருந்து அழைத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் மரணம் தொடர்பான நீதியான சுயாதீனமான விசாரணை விடயத்தில் தொடர்ந்தும் தாம் வலியுறுத்தி வருவதாகவும் எந்த ஒரு வேளையும் தம்மை தொடர்பு கொள்ளுமாறும் தேவையான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்க உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் உயிரிழந்த சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
