
தன்னை ஒரு துறவியாக காட்டி மதம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் கைது
சமூக ஊடகங்களில் பௌத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு தம்மை ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் யூடியூப் மற்றும் டிடொக் போன்ற சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு அவமரியாதை தரும் வகையில் பதிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கம்பஹா மாவட்டத்தின் கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இரத்தினபுரியை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
