
தற்காலிக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயம்
பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
மாணவர்கள் இருவரும் பாடசாலையின் நுழைவாயிலில் ஏறி விளையாடிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் சிலாபம் – அம்பகதவில பாடசாலையில் பதிவாகியுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை மூடுவதற்காக தற்காலிகமாக கட்டப்பட்ட சுவர் இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மாணவர் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். மற்றைய மாணவர், சிலாபம் பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்
குறித்த கல்லூரியின் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
