கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,  1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 30 ரூபா முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு, இன்று முதல் 1,250 ரூபாய்க்கு விற்கப்படும்  என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை நேற்றே அதிகரித்துள்ளதாகவும் சில வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே,  பண்டிகை காலம் என்பதால் முட்டையின் விலையும் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளமையும்  சில இடங்களில் அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.