கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 140 கைதிகள் : 104 பேர் இதுவரை கைது

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் 104 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை தங்க வைக்கப்பட்டுள்ள கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை மாலை சுமார் 140 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்துஇ கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில்இ தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன