கைத்தொலைபேசியை பார்த்தபடி பேரூந்தை ஓட்டிய சாரதி : ஆபத்தில் பயணிகள்

-அம்பாறை நிருபர்-

 

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேரூந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நேற்று திங்கட்கிழமை 12 .30 மணியளவில் கிளிநொச்சி-வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேரூந்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில் அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பெறுமதியான பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.