
நாடளாவிய ரீதியில் அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை
நாடளாவிய ரீதியில் நாளை செவ்வாய்க்கிழமை சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு குறைந்த பட்சம் 20,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
