தகராறின் விளைவு : தாய் மற்றும் மகன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவரும் அவரது மகனும் கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயல்வீட்டினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் அவரது 25 வயது மகன் ஆகிய இருவருமே இவ்வாறு  பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்ய எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தாய் மற்றும் மகன் ஆகிய இருவருமே தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.