தன்னுடைய லொறியில் மோதிய முதியவருக்கு லொறியின் சாரதி செய்த மோசமான செயல்

விபத்தில் உயிரிழந்த 83 வயதுடைய நபரொருவரின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறியின் சாரதி பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூகொடஇ தங்கல்லை பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை லொறி ஒன்றில் மோதுண்டு முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த முதியவரை தான் வைத்தியசாலையில் அனுமதிப்பதாக தெரிவித்து குறித்த லொறியின் சாரதி அழைத்து சென்றுள்ளார்.

எவ்வாறாயினும்இ விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீறடறர் தொலைவில் சந்தேக நபரான லொறியின் சாரதி விபத்தில் படுகாயமடைந்த முதியவரை காயங்களுடன் கைவிட்டுச் செல்வது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த 83 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரைத் தேடி பூகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் லொறியுடன் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.