
கொழும்பில் 78 மில்லியனுடன் 8 பேர் கைது
அனுமதியற்ற கைத்துப்பாக்கி மற்றும் 78 மில்லியனுக்கு மேல் பணம் வைத்திருந்த 33 மற்றும் 48 வயதுக்குட்பட்ட 8 பேரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கடத்தல் மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி ஹோட்டல் வளாகத்தில் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி மற்றும் 78,750,000 ரூபாய என்பன சந்தேகநபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடவத்தை, கந்தானை, வத்தளை, மடபட, வலகும்புறுமுல்ல, மாத்தளை மற்றும் கம்புருகமுவ உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கணிசமான தொகையை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
