
பள்ளிவாயலின் காவலாளி சடலமாக மீட்பு
ஹட்டன் ஜூம்மா பள்ளிவாயலின் காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த சி.எம். இப்ராஹிம் (வயது – 67) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
காவலாளி தங்கும் அறையில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காவலாளியின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், சந்தேகநபர் பள்ளிவாசலுக்குள் நுழையும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
