
கராப்பிட்டிய பகுதியில் மண் சரிவு : ஒருவர் பலி
காலி – கராபிட்டிய பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் சிக்குண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் சிக்குண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றைய மூவரும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது
