
மட்டு.களுவாஞ்சிக்குடி போக்குவரத்து சபைக்கு விரைவில் பேருந்து ஒன்று வழங்க ஏற்பாடு
மட்டக்களப்பு களுவாஞ்சி குடி போக்குவரத்து சபைக்கு பஸ்வண்டி ஒன்று விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பு தலைவரும் ரணில் 2024 செயலணி தலைவருமான கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
போரதீவு பற்று 38ம் கிராமம் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக தன்னுடைய முயற்சியால் களுவாஞ்சி குடி போக்குவரத்து சபைக்கு பஸ்வண்டி ஒன்று விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
