
December 09 -International Anti-Corruption Day
(சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்)
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சமவாயம் அக்டோபர் 2003 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 14 டிசம்பர் 2005 ஆம் திகதி முப்பது நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் குறித்த சமவாயம் நடைமுறைக்கு வந்தது.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் இச் சமவாயத்தின் பங்காளிகளாக இருப்பதுடன், 2004 மார்ச்சில் இச் சமவாயத்தில் அங்கம் வகிக்கும் முதன்மை நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
ஊழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும் ஊழலைத் தவிப்பதற்கும் டிசம்பர் 9 ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பொதுச் சபை அறிவித்துள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ‘குலோபல் கறப்ஷன் பரோமீட்டர்’ அறிக்கையினை வெளியிட்டது.
குலோபல் கறப்ஷன் பரோமீட்டர் அறிக்கை என்பது உலகின் பாரியளவில் பொதுமக்களிடையே நடைபெறும் ஊழல்பற்றிய அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பாகும்.
பொதுமக்களிடையே இடம்பெறும் கருத்துக்கணிப்பின் பிரகாரம் ஊழல் காரணமாக எவ்வாறு தனிநபரது வாழ்க்கை பாதிப்படைகிறது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் தேசியமட்டத்தில் ஊழலை இல்லாதொழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களின் கருத்துக்களையும் கொண்டுள்ளது.
கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள்:
நீதித்துறை, அரசாங்கம், பொலிஸ் ஆகிய அரச நிறுவனங்களில் தாம் எந்த அரச நிறுவனத்தை மிகவும் நம்புகிறார்கள் என வினவிய போது, 73 % ஆனோர் தாம் கணிசமான அளவு அல்லது அதிக அளவில் நீதித்துறையையும் நீதிமன்றத்தையும் நம்புவதாக தெரிவித்தனர்.
அத்துடன் முழுவதுமகாக ஒப்பிடுகையில் அரசாங்கம் மீதான நம்பிக்கை 47% மும் பொலிஸார் மீது 57% வீதமும் உள்ளது.
நான்கில் ஒரு பகுதி பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது குறித்த சேவையைத் துரிதப்பதுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக ஏற்றுக்கொள்கின்றனர்.
எனினும் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறக இலஞ்சம் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல எனத் தெரிவித்தனர்.
பதிலளித்தோரில் கிட்டத்தட்ட அரைவாசிப்போர் ஊழலின் ஒருவடிவாமாக பாலியல் இலஞ்சம் இருப்பதாக நம்புகின்றனர்.
அரச அதிகாரிகளினால் அரச சேவைகளை வழங்கும் போது பிரதிபலனாக பாலியல் சலுகைகள் சிலவேளைகளில் அல்லது அடிக்கடி பெறப்பட்டுள்ளது.
இவை கிராமப்புற மக்களிலும் பார்க்க நகரப்புற மக்களிடம் அதிகம் கோரப்பட்டுள்ளது. எனினும், கிரமமப்புற மக்களிலும் பார்க்க தோட்டப்புற மக்கள் மிகவும் இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாக உள்ளனர் என்பதை தரவுகள் காட்டுகின்றது.
இலஞ்சம் ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று இயங்குகின்றது எனும் விடயம் 86% ஆனோர் அறிந்துள்ள போதிலும் 72% ஆனோர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்செயல்களின் போது முறையிடக்கூடிய பொறிமுறை பற்றி அறிந்திருக்கவில்லை.
‘குலோபல் கறப்ஷன் பரோமீட்டர்’ TISL இனால் 2019 ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் 9 மாகாணங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கையாகும்.
இதில் நகர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 18-80 வயதுக்குட்பட்ட 1300 பிரஜைகள் பங்குபற்றித் தமது கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர்.
