காத்தான்குடி மத்ரஸா மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு

-காத்தான்குடி நிருபர்-

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா – இளைஞர் விவகாரக் குழுவின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஒன்றாக பாடசாலைகள் மற்றும் மத்ரஸாக்களை மையப்படுத்திய மாணவர்களுக்கான விஷேட ஆன்மீக விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது.

காத்தான்குடி  ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சுமார் 110 மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளதுடன் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் பிரதான வளவாளராக இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர் அஷ்ஷேய்க் எம். எம். எம். இல்ஹாம் (பலாஹி) கலந்து நடத்தினர்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இளைஞர் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடசாலை மற்றும் அரபு மத்ரஸாக்களில் பொருத்தமான வளவாளர்களைக்  கொண்டு இச் செயலமர்வு நடாத்தப்பட்ட இருக்கின்மறை குறிப்பிடத்தக்கது.