மகனின் 16 வயது காதலிக்கு தந்தை செய்த செயல் : திரைப்பட கதை நிஜத்தில்

மகனின் 16 வயது காதலியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் – ஆணைமடு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயதுடைய  இளைஞன் ஒருவர் தனது 16 வயது காதலிக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் கர்ப்பமாகியிருந்த தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவனித்து வந்துள்ளார்.

இதன்போது இளைஞனின் 16 வயதுடைய காதலி மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய குறித்த இளைஞனின் தந்தை தனது மகனின் காதலியை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இந்த யுவதி தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காதலனால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆணைமடு நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.