காத்தான்குடியில் ஆயிரக்காணக்கானோர் முன்னிலையில் சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்துல் சபீலிற் ரஷாத்;  குர்ஆன் மத்ரஸாவில் கடந்த 5ஆம் திகதி சாய்ந்தமருது மத்ரஸாவில் மீட்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது மாணவனின்   ஜனாஸா இன்று வியாழக்கிழமை மாலை அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்குடிக்கு எடுத்துவரப்பட்டது.

காத்தான்குடிக்கு கொண்டுவரப்பட்ட ஜனாஸா காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காத்தான்குடி மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.