மகனின் குழந்தையை வயிற்றில் சுமந்த தாய்

அமெரிக்காவின் – உட்டா மாகாணத்தில் மருமகளால் கருத்தரிக்க முடியாத நிலையில் தனது மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்துள்ளார் நான்சி ஹாக் என்ற 56 வயதாகும் தாய்.

இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும் உள்ளனர். மருமகள் கேம்பரியாவால் கருத்தரிக்க முடியாத சூழலில், அவருக்காக வாடகைத் தாயாக நான்சி மாறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்னா என்ற அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தனது மகன் மற்றும் மருமகள் குழந்தைக்காக ஏங்கியது தனக்கு வருத்தம் அளித்ததாக தெரிவித்த நான்சி, அவர்கள் மகிழ்ச்சிக்காக இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

நான்சி தற்போது தனது மகன் மற்றும் மருமகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நான்சி தனது குடும்பத்தினருடன் பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.