பொலிஸார் சார்ஜன்ட் 7 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா பாலத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி களனி ஆற்றில் வீழ்ந்து காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் 7 நாட்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவில் வசிக்கும் பொலிஸ்; தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.

சார்ஜன்ட்டின் சடலம் மனைவியினால் அடையாளம் காணப்பட்டதையடுத்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சார்ஜன்ட் கடந்த 29ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியதாக மனைவி தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.