
யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன்
யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் திவாகர் (வயது 18) என்ற இளைஞனே வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இளவாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
