
கல்முனை உப பொலிஸ் பரிசோதகர் பாலியல் இலஞ்சம் : 19ஆம் திகதி வரை விளக்கமறியல்
கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த உப பொலிஸ் அதிகாரி அதிகாரி கடந்த 22ஆம் திகதி இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே கல்முனை கடற்கரைப்பகுதியில் உள்ள தனியார் ஒன்றில் வைத்தே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு விசாரணணை தொடர்பாக உப பொலிஸ் பரிசோதகர் பொலகல்முனை, வரிபத்தாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளுக்கு ….
