
தனியார் பல்கலைக்கழக மாணவன் சொகுசு காருடன் சகமாணவர்களால் கடத்தல்
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடந்த 4ஆம் திகதி கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் சக மாணவர்கள் மூவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பலவந்தமாக பதிவு செய்ய முயற்சித்த குறித்த பல்கலைக் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொ{ஹவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார் பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் மாணவன் பயணித்த சொகுசு காரின் பாதையை வேன் ஒன்று குறுக்கே மறித்த நிலையில் வேனிலிருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் குறித்த காருடன் மாணவனுடன் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
