
தென்கொரியாவில் இலங்கையர் ஒருவர் கொலை
தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் சக இலங்கையர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 03) இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவர் ஜப்பானில் பணிபுரிந்து வருவதாகவும், நோய்வாய்ப்பட்ட தனது தந்தையைப் பார்ப்பதற்காக இலங்கை திரும்பியதாகவும், பின்னர் அவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவுக்கு வெல்டர் வேலை செய்யச் சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
தென் கொரியாவில் உள்ள மோக்போ பகுதியில் அவர் மேலும் இருவருடன் பகிரப்பட்ட வீட்டில் தனது கணவர் வசித்து வந்ததாகவும் அங்கு மது அருந்திவிட்டு நபர் ஒருவர் தொடர்ந்து தன்னோடு சண்டையிடுவதைப் பற்றி தனது கணவர் தன்னிடம் பலமுறை தெரிவித்திருந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக வேலைவாய்ப்பு முகவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர்களின் கடைசி தொலைபேசி உரையாடலின் போது, தனது கணவர் மற்றைய இலங்கையர் தன்னோடு தொடர்ந்து பிரச்சினைபடுவதை மீண்டும் ஒருமுறை தன்னிடம் தெரிவித்தார்’ என்றும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அவர் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த போது மற்றைய இலங்கையரால் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அறிவித்தது.
சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருப்பதை தென்கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
