
காத்தான்குடி சிறுவன் சடலமாக மீட்பு ?
காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் சாய்ந்தமருது பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.முஷாப் (வயது-13) என்பவரே சாய்ந்தமருது பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பல சந்தேகங்கள் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் எவும் இதுவரை கிடைக்கவில்லை.


