மல்வத்த அமில உள்ளிட்ட மூவர் கைது

பேலியகொட மீன் சந்தையின் தலைவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதாக கூறப்படும் ‘மல்வத்த அமில’ உள்ளிட்ட மூவர்  போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 22 கிராம் 970 மில்லிகிராம் ஹெரோயின், 15 கிராம் 940 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கப்பம் கோர பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.