
மூன்று நாட்களில் 1000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
இலங்கையில் கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இது டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதைக் குறிக்கும் வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு மீண்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 நோயாளர்கள் பதிவாகும் நிலைக்கு வந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
எனவே, டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், நுலம்பு உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டு அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2023 ஆம் ஆண்டில் டிசம்பர் 04 ஆம் திகதி வரை மொத்தம் 77,487 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 16,363 அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பாதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 36,266 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது அதிகபட்சமாக மாகாண வாரியாக உள்ள நிலையில் இது மொத்த தொற்றுக்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
