நகை தொடர்பான வாய்த்தகராறு: தவறான முடிவுக்கு முயன்ற தாயும் மகளும்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார்.

பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா (வயது – 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

உறவினர் ஒருவருக்கு 20 பவுண் நகை வழங்கியது தொடர்பில் தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இருவரும் நஞ்சருந்திய நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து, குறித்த தாய் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாய் நேற்றைய தினம் சிகிச்சையளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸ் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.