மாயமான 13 வயது பிக்கு: பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனாராம விகாரையில் கற்கை நெறியை மேற்கொண்டு வந்த அமரகெதர தேவசிறி (வயது – 13) என்ற இளம் பிக்கு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவின்ன ரட்டியால பிரிவெனாவில் கல்வி கற்கும் இந்த பிக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு முதல் விகாரைக்கு வரவில்லை என புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராமதாதிபதி கொஸ்கல சிறிதம்ம தேரர் புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் புளத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0342282292, 0775155744, 078594395 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு புலத்சிங்கள பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாயமான 13 வயது பிக்கு பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்