மீண்டும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல்: 178 பேர் உயிரிழப்பு

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை முதல் காசாவில் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளதுடன் இதன்போது 200 பயங்கரவாத இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸ் தரப்பினரும் பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தெற்கு காசாவில் வசிப்பவர்களை வெளியேறி, தெற்கு எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ரஃபா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்