வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

பசறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பசறை பிரதேச சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலில் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் உயிர் சேதங்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்