நெடுந்தீவில் இடம்பெற்ற சர்வதேச மீனவர் தினம்

-மன்னார் நிருபர்-

யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் சர்வதேச மீனவர் தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நெடுந்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதி திருமதி அமல ஜயான் றோயலா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி.சத்திய சோதி, மற்றும் விருந்தினர்களாக நெடுந்தீவு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் லீலியன் குரூஸ், நெடுந்தீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வேர்ஜினி ஜெகாந்தன் மற்றும் மெசிடா நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் பெண்கள் வலையமைப்பு பிரதிநிதிகள், மீனவ பெண்கள், மீனவ சங்க பிரதி நிதி களும் கலந்து கொண்டனர்.

 

நெடுந்தீவில் இடம்பெற்ற சர்வதேச மீனவர் தினம்

நெடுந்தீவில் இடம்பெற்ற சர்வதேச மீனவர் தினம்

நெடுந்தீவில் இடம்பெற்ற சர்வதேச மீனவர் தினம்