போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்ததுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரமே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 11 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், மருத்துவ அறிக்கைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், வங்கி பற்றுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.