
மட்டக்களப்பில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் காரில் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது 2,500 போதை மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
