
பெண் சமூக ஆர்வலர் இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக மீட்பு
மொரட்டுவை பிரதேசத்தில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அயல் வீட்டுப் பெண் ஒருவர் இவரது வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண் இரத்தம் கசிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்ததையடுத்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது இவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
