கிணற்றில் விழுந்த கோழி: அயல் வீட்டுக்காரரை கண்ணாடி போத்தலை உடைத்து தாக்கிய இளைஞர்

கிணற்றில் விழுந்த கோழியை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனிபதிகொட, கம்வத்தகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேகநபரின் குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்துவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததையடுத்து கோழியை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சந்தேக நபர் போத்தலை உடைத்து பக்கத்துவீட்டு நபரின் மார்பிலும் வயிற்றிலும் முதுகிலும் குத்தி தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்