
வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன் வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (வயது – 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை எனவும் குறித்த வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




