
ஏறாவூர் கடலில் குளிக்கச் சென்ற சிறுவனை காணவில்லை
ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சிறுவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.
புன்னைக்குடா கடலில் இன்று மாலை 5 மணியளவில் குளிக்கச் சென்ற 15 வயதுடைய ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த சிறுவனனே காணாமல் போயுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனே சக நண்பர்கள் நால்வருடன் குளிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீணவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
